ஆராவ்:
நேற்று பெர்லிஸில் உள்ள மாநில மசூதியில் ‘சுபகு ‘ எனப்படும் அதிகாலை நேர தொழுகைக்குப் பிறகு நடந்த சமய விரிவுரையில் (குத்பா) கலந்துகொண்ட பெர்லிஸ் குமாநில குடிநுழைவு துறையின் முன்னாள் துணை இயக்குநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
65 வயதான யாஹ்யா காதிர் என்பவரே சமய விரிவுரையின் போது திடீரென சரிந்து மயங்கி விழுந்தார் என்றும், இந்த சம்பவம் நேற்றுக் காலை 7.10 மணியளவில் நடந்ததாகவும் ஆராவ் துணை போலீஸ் தலைமை உதவி கண்காணிப்பாளர் முகமட் நோர்சுகி ஹுசைன் தெரிவித்தார்.
“தொழுகையின் பின்னர், உட்கார்ந்து விரிவுரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது, அவர் திடீரென விழுந்தார். அங்கிருந்த ஏனை தொழுகையாளர்கள் உதவ முயன்றனர், ஆனால் பதில் இல்லை,” என்று அவர் கூறினார்.
பின்னர் மசூதி அதிகாரிகள் ஆம்புலன்ஸை அழைத்ததாகவும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர் இறந்துவிட்டதாக துணை மருத்துவர்கள் அறிவித்ததாகவும் நோர்சுகி கூறினார்.
“உடலைப் பரிசோதித்ததில் தவறான குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், ஆனால் மருத்துவப் பதிவுகள் அவருக்கு நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன,” என்றும் அவர் மேலும் கூறினார்.
சடலம் அவரது குடும்பத்தினரால் உரிமை கோரப்பட்டு, அவரது உடல் தம்புன் துலாங்கில் உள்ள ஒரு முஸ்லிம் ஈமத்து கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.



















