துண்டாக்கப்பட்ட ஹாங்காங் மாடல் அழகியின் தலை சூப் பானையில் கண்டுபிடிப்பு ; முன்னாள் கணவர் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு

ஹாங்காங் நாட்டின் சமூக செயற்பாட்டாளரும் பிரபல மாடல் அழகியான மான அபி சோய், கொடூரமான கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது தலை சூப் சமைக்கப்பட்ட இரண்டு பெரிய பானையில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஹாங்காங் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீடொன்றில் இருந்து அபியின் உடற்பாகங்களைப் போலீசார் கண்டெடுத்தனர்.

ஹாங்காங்கின் உட்புறப் பகுதியான தை போ மாவட்டத்தில் உள்ள மூன்று மாடி வீட்டிற்குள் சோய் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாகவும், இரண்டு பெரிய பானைகளில் ஒன்றில் தலையும் மற்றொன்றில் விலா எலும்புகளும் இருப்பதை அந்நாட்டு போலீசார் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பில் சேய்யின் முன்னாள் கணவர், அவரின் சகோதரர், அவர்களின் தந்தை ஆகியோருடன் 63 வயது மாது ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.

அத்தோடு இக்கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தபட்டதாக நம்பப்படும் மின் ரம்பம், இறைச்சி அரைக்கும் இயந்திரம், மழைப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் ஆடை, கையுறை, முகக்கவசங்கள் ஆகியவற்றையும் போலீசார் அவ்வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

பணத்தகராறு காரணமாக இந்தக்கொலை நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here