பட்டதாரி கண்காணிப்பு ஆய்வு அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டு நாட்டில் 41,467 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாகவும், அந்த ஆண்டு படிப்பை முடித்த 286,299 உள்ளூர் பட்டதாரிகளில் வேலையற்றோர் எண்ணிக்கை 14.5 விழுக்காடாக உள்ளது என்றும், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்ய, அவர்கள் அனைவருக்கும் திறமைகள் மற்றும் திறன்கள் அடிப்படையில் அவர்களை உறுதிப்படுத்த அமைச்சகம் தொடர்ச்சியான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது,” என்று அவர் கூறினார்.
உள்ளூர் பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்பிய ஜமாலுதீன் யாஹ்யா (PN-Pasir Salak) கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதை உறுதிச் செய்வதற்கான பாடத்திட்டம் மூன்று மற்றும் ஐந்தாண்டு இடைவெளியில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றார்.
மேலும் பட்டதாரிகளுக்கான வேலைகள் சமூகப் பாதுகாப்பு அமைப்புடன் (Socso) இணைந்து, அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு வேலை கிடைப்பதை உறுதி செய்வதற்கு பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், உதாரணாமாக MYFutureJobs போர்டல் போன்ற தொழில் திருவிழா மூலம் செயல்படுத்தப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.








