இளம் இயக்குநர் திடீர் மரணம்

மோலிவுட் என அழைக்கப்படும் மலையாள சினிமாவில் விரைவில் ரிலீஸாக இருந்த ‘நான்சி ராணி’ படத்தின் இயக்குநர் மனு ஜேம்ஸ் தனது 31வது வயதில் நேற்று காலமானார். அவர் ஆலுவாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனு ஜெம்ஸின் கனவு திரைப்படமான ‘நான்சி ராணி’ இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அஹானா கிருஷ்ணா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சன்னி வெய்ன், அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், லீனா மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் மனு ஜேம்ஸ் அதிர்ச்சி மரணமடைந்தது, படக்குழுவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனு ஜேம்ஸ் இயக்கிய நான்சி ராணி படம் வெளியாவதற்கு முன்பே உயிரிழந்துள்ளது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் மறைவிற்கு கேரள நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here