கோலாலம்பூர்:
மலேசியச் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) சட்டங்களின் கீழ், முதலீட்டு வங்கி ஒன்றின் முன்னாள் தலைமை அதிகாரி (CEO) மற்றும் பெண் இயக்குநர் உட்பட மூன்று நபர்கள் கோலாலம்பூர் மற்றும் சிரம்பான் செஸன்ஸ் நீதிமன்றங்களில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அசுரா அல்வி மற்றும் சுசானா ஹுசின் முன்பாகவும், சிரம்பான் நீதிமன்றத்தில் நீதிபதி குனசுந்தரி மாரிமுத்து முன்பாகவும் இந்த வழக்குகள் விசாரனைக்கு வரவுள்ளன.
இதில், முன்னாள் தலைமை அதிகாரி மீது 130 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளும், தனியார் உயர்கல்வி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான (CFO) மூன்றாவது நபர் மீது 6.56 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவுள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார, பெருநிறுவனத் துறைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஊழல் வழக்கு விசாரணை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























