நாடாளுமன்ற அமர்வு ஏப்ரல் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது

வரும் மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய இருந்த தற்போதைய நாடாளுமன்ற அமர்வு ஏப்ரல் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மக்களவை சபாநாயகர் டத்தோ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 11(2) இன் படி, சபையின் தலைவரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நீட்டிப்பு சட்ட மசோதாக்கள் மற்றும் அரசாங்க திட்டங்களை தாக்கல் செய்து முடிவெடுக்கவும் வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

“இந்த நீட்டிப்பு தொடர்பில் அனைத்து எம்.பி.க்களுக்கும் எழுத்துப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here