சபா கடல்சார் போலீசாரால் சுமார் 6 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்கள் பறிமுதல்; நால்வர் கைது

கோத்தா கினாபாலுவின் பியூஃபோர்ட் மாவட்டத்தில் வரி செலுத்தப்படாத சுமார் 6 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானங்களை சபா கடல்சார் போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் சட்டவிரோத மதுபானங்கள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 33 முதல் 39 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் ஆண்களையும் அவர்கள் கைது செய்தனர்.

நேற்று இரவு சுமார் 9 மணியளவில் Kg Bintuka Laut படகுத்துறையில் மேற்கொண்ட ‘Op Kotraban’ சோதனை நடவடிக்கையின்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக, சபா பிராந்தியத்தின் கடல்சார் போலீஸ் கமாண்டர், துணை ஆணையர் அஹ்மட் ஆரிஃபின் கூறினார்.

தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த கைது மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“சந்தேக நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைக்காக பியூஃபோர்ட் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here