எச்சரிக்கை: சபா மாநிலத்தின் பல பகுதிகளில் மார்ச் 11 வரை கனமழை நீடிக்கும்!

கோலாலம்பூர்:

மலேசியாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை தொடங்கி புதன்கிழமை (மார்ச் 11) வரை மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மலேசிய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக சபா மாநிலத்தின் ரானாவ், லஹாத் டாத்து, தெலுபிட், கினபத்தாங்கான், பெலுரான், சண்டாக்கான் மற்றும் குடாட் ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மற்றும் பயணங்களை மேற்கொள்வோர் வானிலை மாற்றங்களைக் கவனித்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். துல்லியமான தகவல்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் தளங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here