தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஆஸ்திரேலிய போலீசாரால் சுட்டுக்கொலை

32 வயதான இந்தியர் ஒருவர், நேற்று ஆஸ்திரேலிய போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் முகமட் ரகமத்துல்லா சையது அகமட் என்றும், தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் கூறி உள்ளனர்.

சையது அகமட் நேற்று சிட்னி மேற்கு ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தபோது, 28 வயதான துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தி உள்ளார். இதையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து 2 போலீசார் அவரை நெருங்கி வந்தனர். அப்போது அவர்களையும் அகமட் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அகமட்டின் நெஞ்சில் 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here