அன்னுவார் மூசாவை இருகரம் நீட்டி வரவேற்க பெரிகாத்தான் தயார் என்கிறார் ஹாடி

 டான்ஸ்ரீ அன்னுவார் மூசாவை இருகரம் நீட்டி வரவேற்க பெரிகாத்தான் நேஷனல் தயாராக உள்ளது என்று பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் கூறினார். அரசியலைப் புரிந்து நல்ல முடிவுகளை எடுக்கும் தலைவர் என்பதால் அவரை நாங்கள் இருகரம் நீட்டி வரவேற்கிறோம் என்று Fiqh Siasah Abdul Hadi Awang புத்தக வெளியீட்டிற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (பிப். 28) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அப்துல் ஹாடி கூறினார்.

முன்னாள் Ketereh MP உள்ளூர் அரசியலைப் பற்றி அறிந்த ஒரு திறமையான தலைவர் என்று அப்துல் ஹாடி மேலும் கூறினார். அவர் திறமையான  முடிவை எடுப்பவர் என்று அப்துல் ஹாடி கூறினார். முஃபகாத் நேஷனல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரான அன்னுவார் – கடந்த டிசம்பரில் அம்னோ உச்ச கவுன்சிலால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அரசியலில் இருந்து மூன்று மாதங்கள் “ஓய்வு” எடுக்க முடிவு செய்தார்.

இருப்பினும், தனது விருப்பங்களை இப்போது பரிசீலித்து வருவதாகவும், எந்த அரசியல் கட்சியிலும் சேரத் தயார் என்றும் அன்னுார் திங்கள்கிழமை (பிப் 27) தெரிவித்திருந்தார். இதற்கிடையில், 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) அரசியல் முன்னேற்றங்கள் காரணமாக பெரிக்காத்தான் வாய்ப்புகள் குறித்து தான் நம்பிக்கையுடன் இருப்பதாக அப்துல் ஹாடி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here