நாட்டிலுள்ள அனைத்து KTM ரயில் நிலையங்களிலும் மின்தூக்கி பொருத்தப்படும் என்கிறார் போக்குவரத்து அமைச்சர்

நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை எளிதாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேவையான பல முயற்சிகளை போக்குவரத்து அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. அதில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வசதிக்காக, நாட்டிலுள்ள அனைத்து KTM ரயில் நிலையங்களிலும் மின்தூக்கிகளை நிறுவும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

அதே நேரத்தில், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேம்படுத்த அல்லது விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய ரயில் நிலையங்களையும் அமைச்சகம் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

“ரயில் நிலையங்களில் நெரிசலைப் பொறுத்தவரை, இது பரபரப்பான நேரங்களில் மட்டுமே சற்று அதிகமாக இருக்கும். ஆனாலும் அவற்றையும் மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் உள்ளன, ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்” என்று, நேற்று புதன்கிழமை (மார்ச் 1) புக்கிட் மெர்தாஜாம் கேடிஎம் நிலையத்தில் சோதனை செய்த பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இதற்கிடையில், பிப்ரவரி 18 முதல் நாட்டின் வட திசையை உட்படுத்திய பயணங்களுக்காக KTM ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தினசரி 10,480 பேரில் இருந்து 11,224 ஆக உயர்ந்துள்ளது, இது 7 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டுகிறது என்று லோக் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here