கோவிட் -19 கட்டுப்பாட்டுக்குப் பின் சீனாவிலிருந்து முதல் நேரடி விமானம் சபாவை வந்தடைந்தது

கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு நாட்டில் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வடைந்ததைத் தொடர்ந்து, சீனாவிலிருந்து சபா மாநிலத்திற்கு 140 சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்ட முதல் நேரடி விமானம் இன்று சபாவை வந்தடைந்தது.

சீனாவின் குவாங்சோவிலிருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானம், இன்று அதிகாலை 5.30 மணிக்கு சபா கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தை (KKIA) வந்தடைந்தது என்று, சபா சுற்றுலா வாரியம் (STB) இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சபா வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளை சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் டத்தோ ஜோனிஸ்டன் பாங்குவாய் வரவேற்றார்.

“சீன சுற்றுலாப் பயணிகள் மீண்டும் நாட்டுக்கு சுற்றுலா வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் எங்கள் தொழில்துறையினர் நாட்டின் விருந்தினர்களுக்கு தேவையான விருந்தோம்பல் சேவைகளை தொடர்ந்து வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ஜோனிஸ்டன் அந்த அறிக்கையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here