ஜோகூரில் அவசரநிலையை பிரகடனப்படுத்த தேவையில்லை என்கிறார் ஃபாஹ்மி

மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜோகூரில் தற்போது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று தகவல் தொடர்பு மற்றும் இயக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

“ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவிகளை வழங்குவது என்பது குறித்து மக்களவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்றும், ஆனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்துவது தொடர்பான எந்த விஷயமும் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை” என்று, அவர் இன்று (மார்ச் 3) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவுவது மற்றும் மாநிலத்தில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் தொடர்ந்து பார்ப்போம்,” என்றும், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி ஜோகூருக்கு நேரில் சென்று, நிலைமையை பார்வையிடடார் என்று அவர் கூறினார்.

மேலும் ஜோகூருக்கு உடனடி உதவியாக 50 மில்லியன் ரிங்கிட்டை கூட்டரசு அரசாங்கத்தால் வழங்கப்படுவது குறித்தும் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதாக ஃபாஹ்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here