தவறாக நடக்க முயன்ற நடிகரை கன்னத்தில் அறைந்த நடிகை

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான நோரா பதேஹி இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நோரா பதேஹி பேசும்போது, “நான் நடித்த ரோர்: தி டைகர் ஆப் சுந்தர்பேன்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு வங்கதேசத்தில் உள்ள காடுகளில் நடந்தது. அப்போது என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர் தவறாக நடக்க முயன்றார். உடனே அந்த நடிகரின் கன்னத்தில் நான் ஓங்கி அறைந்தேன். பதிலுக்கு அவரும் என்னை அடித்தார்.

இதனால் கோபத்தில் மீண்டும் அவரை அடித்தேன். அப்போது எனது தலைமுடியை பிடித்து அந்த நடிகர் இழுத்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு மோசமாக திட்டி அடிதடி சண்டை போட்டுக்கொண்டோம் என்றார். இது விஷயம் தற்போது பரபரப்பாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here