தன் மனைவி முகேஷ் என்ற ஆடவருடம் சென்றதால் முகேஷின் மனைவியை திருமணம் செய்து கொண்ட ஆடவர்

பாட்னா: இந்தியாவில் ஆடவர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில், தனது மனைவியின் காதலரின் துணையை மணந்து மனைவியாக ஏற்றுக் கொண்டார். வேறொரு ஆணுடன் ஓடிய மனைவி ரூபி தேவி மீது கோபம் கொண்ட நீரஜ் அவ்வாறு செய்துள்ளார்.

பீகாரில் உள்ள ககாரியா மாவட்டத்தில் இந்த விசித்திரமான கதை நடந்ததாக டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. ரூபி 2009 இல் நீரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த ஜோடிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இருப்பினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, நீரஜ் தனது மனைவி முகேஷ் என்ற நபருடன் தொடர்பு வைத்திருப்பதைக் கண்டுபிடித்தார். ஈடிவி பாரத் ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், ரூபியும் முகேஷும் கடந்த பிப்ரவரியில் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த நீரஜ், தனது மனைவியை கடத்திச் சென்றதாக முகேஷ் மீது போலீசில் புகார் செய்தார். பிரச்சினையைத் தீர்க்க விவாதம் நடத்துமாறு நீரஜ் கிராமக் குழு அல்லது பஞ்சாயத்துக்குத் தெரிவித்தார், ஆனால் முகேஷ் அதன் முடிவை ஏற்க மறுத்துவிட்டார். அதிலிருந்து முகேஷும் ஓடிவிட்டார் என்று அறிக்கை விளக்கியது.

முகேஷுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் அவரது மனைவியின் பெயரும் ரூபி என்பது ஆச்சரியமான விஷயம். பழிவாங்கும் நோக்கில் முகேஷின் மனைவியை கடந்த மாதம் திருமணம் செய்ய நீரஜ் முடிவு செய்தார்.இந்த ஜோடியின் திருமணம் குறித்த கதை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகளை வரவழைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here