ஜோகூர் பாரு:
மலேசியர்களுக்கான RON95 பெட்ரோலின் விலையை அரசாங்கம் உயர்த்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
RON95 பெட்ரோலின் விலையை அதிகரிக்கும் திட்டம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
“RON95 பெட்ரோல் மானியங்கள் பிரச்சினையை நான் பரிசீலித்து வருகிறேன்… சிலர் பொதுமக்களுக்கான விலையை அதிகரிக்க முன்மொழிந்துள்ளனர்.
“இருப்பினும், விலை உயர்வை நான் ஏற்கவில்லை. அதற்கு பதிலாக, RON95 இன் விலையை காலம் மற்றும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப படிப்படியாகக் குறைக்க முடியும் என்றார்.
























