இன்று காலை சிம்பாங் எம்பாட்டின் கம்போங் பெண்டாங் பாருவில் உள்ள அவரது வீட்டில், தனது மனைவியை சுட்டுக் கொன்றதாக நம்பப்படும் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரின் மைத்துனர் என்று நம்பப்படும் ஒருவரிடமிருந்து குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக, கங்கார் மாவட்ட காவல்துறை யுஷரிபுதீன் முகமட் யூசோப் தெரிவித்தார்.
சந்தேக நபர் வீட்டின் பிரதான படுக்கையறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு அவரது 26 வயது மனைவியின் சடலமும் காணப்பட்டதாகவும் யுஷாரிபுதீன் கூறினார்.
“சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றினர்.
மேலும் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் இடது கண்ணில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருந்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
பலியானவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு பௌசியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலைக்கான தண்டனைச் சட்டம் 302வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபருக்கான விளக்கமறியல் நாளை தாக்கல் செய்யப்படும் என்றும் யுஷாரிபுதீன் கூறினார்.