வெள்ளம் காரணமாக 130 சாலைகள் சேதமடைந்துள்ளன – பணிகள் அமைச்சகம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இதுவரை மொத்தம் 130 கூட்டரசு மற்றும் மாநில சாலைகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, பணி அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ வான் அகமட் உசிர் வான் சுலைமான் தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்பட்ட 56 கூட்டரசு சாலைகள் பழுது பார்க்கும் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும், குறித்த பழுதுபார்ப்புக்கு சுமார் RM130 மில்லியன் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று பெர்விரா ஜெயா மற்றும் சிலாங்கூர் நுழைவாயிலில் FT2490 வழித்தடத்தில் பெய்லி பாலம் நிறுவப்படுவதைக் கண்காணித்த பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

42.67 மீட்டர் (140 அடி) நீளமுள்ள குறித்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நாளை மாலைக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here