அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பியாலியாட்ஸ்கிக்கு 10 ஆண்டுகள் சிறை

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சாதனையாளரான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு பெலாரஸ் கோர்ட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதற்கு ஐநா கவலை தெரிவித்துள்ளது.

பெலாரசுக்கு ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகார நாடு என்ற பெயரும் உண்டு. அப்படிப்பட்ட பெலாரசில் மிக முக்கியமான ‘வியாஸ்னா’ என்ற மனித உரிமை குழுவை நிறுவியவர் அலெஸ் பியாலியாட்ஸ்கி. 2022-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் பியாலியாட்ஸ்கியும் ஒருவர். அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் அடிக்கடி அவரை சீண்டி வந்த நிலையில், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பண கடத்தல் மற்றும் பொது ஒழுங்கை மீறும் குழுக்களுக்கு நிதி உதவி அளித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 60 வயதாகும் பியாலியாட்ஸ்கிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சகாக்கள் இருவருக்கும் 9 மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெலாரஸ் கோர்ட்டின் இந்த உத்தரவு, ஐநா மற்றும் உலக நாடுகளை கவலையுற செய்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here