நத்தாருக்கு முன் சாலைகளை சீரமைக்க கூட்டரசு அரசாங்கம் சரவாக்குடன் இணைந்து செயல்படும் – துணை பிரதமர்

இந்த ஆண்டு நத்தாருக்கு முன் மாநிலத்தில் சேதமடைந்துள்ள சாலைகள் (Jalan Jiwa Murni) மற்றும் தெருக்கள் என்பவற்றை சீரமைக்க மத்திய அரசு சரவாக் உடன் இணைந்து செயல்படும் என்று, டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

கிராமிய மற்றும் உள்ளக வளர்ச்சி அமைச்சகத்தின் நிதியுதவியுடன் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், சுமார் 578 கிலோமீட்டர் சாலைகள் சீரமைக்கப்படும் என்று துணைப் பிரதமர் கூறினார்.

மரம் வெட்டும் வாகனங்களால் பயன்படுத்தப்படாத சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், இரண்டாவதாக கனரக வாகனங்களால் பயன்படுத்தும் சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“கிராமப்புறங்களில் இணைப்பைப் பராமரிக்க இந்த சாலைகளை மேம்படுத்துவது முக்கியம். அத்தோடு மிக முக்கிய விஷயம் என்னவென்றால், கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, ஆண்டு இறுதி பருவமழையைத் தவிர்க்கவும் இச்சாலைகள் யாவும் நத்தாருக்கு முன் மேம்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here