RM17.8 மில்லியன் மதிப்புள்ள சியாபு இருந்த கார் பறிமுதல்

நேற்று, கம்போங் போஹோன் புலுவில் கோலா திரெங்கானுவின் 9வது பட்டாலியனின் பொது நடவடிக்கை பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையில், RM17.8 மில்லியன் மதிப்புள்ள சியாபு இருந்த புரோத்தோன் வீரா ஏரோபேக் ரக காரை கைப்பற்றினர்.

இரவு 8.30 மணியளவில் நடந்த இந்த சோதனையில், சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒரு கார் கைவிடப்பட்டிருந்ததை பொது நடவடிக்கை பிரிவினர் கண்டறிந்ததை அடுத்து, குறித்த கார் பறிமுதல் செய்யப்பட்டது என்று, மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

“குறித்த காரை ஆய்வு செய்ததில் நூற்றுக்கணக்கான காபி பானங்களின் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை சோதனை செய்ததில் காபி பாக்கெட்டில் சியாபு போதைப்பொருள் நிரப்பப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது,” என்று, பாசீர் மாஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார். ​​

அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட கார் கண்டறியப்பட்ட பிறகு, அதனை சாலையின் ஓரத்தில் விட்டு விட்டு சந்தேத்த நபர்கள் தப்பியிருக்கலாம் என்றும் இந்த வழக்கு அபாயகரமான மருந்துகள் சட்டம் (ADB) 1952, பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here