கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் ஸ்கேனிங் இயந்திரங்கள் நிறுவி, அவற்றை மேம்படுத்தப்படுத்த அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக துணை நிதியமைச்சர் I, டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் கூறினார்.
இது துறைமுகங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள நுழைவு வாயில்களில் ஸ்கேனர் வசதிகள் அவ்வப்போது உகந்ததாக இருப்பதை அரசும் சுங்கத் துறையும் சரி பார்க்கும் என்று, நேற்று கோத்தா கினாபாலு விமான நிலையத்தில் (KKIA) நிறுவப்பட்டுள்ள ஸ்கேனர் இயந்திரங்களைச் சரிபார்த்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, ஸ்கேனிங் அமைப்புகள் பயனற்றதாக இருந்ததால், நாட்டில் கடத்தல் அதிகமாக இருந்தது, மாறாக இப்போது இந்த ஸ்கேனிங் இயந்திர தொழில் நுட்பம் காரணமாக பல கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன என்றார் .









