அமெரிக்காவிலிருந்து மட்டும் RM63.02 பில்லியன் முதலீடு -பிரதமர்

மெரிக்காவில் முதலீட்டு முன்மொழிவுகளுக்காக மலேசியா RM63.02 பில்லியன் முதலீட்டைப் பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

முக்கியமாக தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து இந்த முதலீடுகள் கிடைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தொகையில், 8.33 பில்லியன் ரிங்கிட் முதலீடு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) கூட்டம் தொடங்குவதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்ட அமெரிக்காவிற்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திட்டத்தில் இருந்து கிடைத்துள்ளது.

மீதமுள்ள முதலீடு ஒருவரையொருவர் நடத்திய கூட்டத்தில் இருந்து வந்திருக்கிறது. இந்த வர்த்தக பணிக்கான முதலீடுகள் Abbott Laboratories, Mondelez International, Amsted Rail, Hematogenix, PerkinElmer, Ford Motor Company, Boeing, Amazon Web Services, Enovix மற்றும் Lam Research ஆகியவற்றிலிருந்து கிடைத்துள்ளது.

மேலும் எஞ்சிய முதலீடு Google, Enovix Cooperation, Microsoft, TikTok மற்றும் TPG போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுடனான தனித்தனி சந்திப்புகளிலிருந்து கிடைத்துள்ளது என்று அமெரிக்க பயணத்தின் முடிவில் மலேசிய ஊடகங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அமெரிக்கா பயணத்தின் மூலம் நாட்டிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here