குளுவாங்கில் கணவருடன் நடைப்பயணம் மேற்கொண்ட மூதாட்டி மலையிலிருந்து சறுக்கி விழுந்ததில் கால் முறிந்தது

இன்று சனிக்கிழமை (மார்ச் 11) குளுவாங், குனுங் லம்பாக்கில் தனது கணவருடன் நடைப்பயணம் மேற்கொண்டபோது, கால் சறுக்கியதில் மலையிலிருந்து விழுந்து மூதாட்டி ஒருவரின் கால் முறிந்தது.

தம்பதியினர் தங்கள் தினசரி நடைப்பயணத்தை மேற்கொள்ளவது வழக்கம், அது போல இன்று மலையிலிருந்து கீழே நடந்து சென்றபோது, துரதிர்ஷ்டவசமாக ​​75 வயது மூதாட்டி கீழே விழுந்ததில் வலது கால் முறிந்தது என்று, குளுவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நிலையத் தலைவர், முகமட் ஃபௌசி முகமட்  நோர் கூறினார்.

தம்பதிகள் அந்த நேரத்தில் தங்கள் தொலைபேசிகளைக் கொண்டு வரவில்லை, ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஒரு வழிப்போக்கர் அவர்களைக் கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார் என்றும், உடனே அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மூதாட்டியை மீட்டு,  சிறப்பு மீட்பு உபகரணங்களின் உதவியுடன் மலைக்கு கீழே கொண்டு சென்று, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் 80 வயது கணவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here