நேற்று முதல் பெய்து வருவம் தொடர் மழையால், கூச்சிங்கின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து, டேவான் சினாரான் லுமூட்டில் இன்று நிவாரண மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கூச்சிங்கின் கம்போங் பண்டால் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் தங்குவதற்காக, ஒரு நிவாரண மையம் நேற்று மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.









