தானங்களும் அவற்றின் பலன்களும்

இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம்.

அன்ன தானம்கடன் தொல்லைகள் நீங்கும்
அரிசி தானம்முன்ஜென்ம பாவங்கள் விலகும்
ஆடைகள் தானம்சுகபோக வாழ்வு அமையும்
பால் தானம்துன்பங்கள் விலகும்
நெய் தானம்பிணிகள் நீங்கும்
தேங்காய் தானம்எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்
தீப தானம்முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்
தேன் தானம்புத்திர பாக்கியம் கிட்டும்
பூமி தானம்பிறவா நிலை உண்டாகும்
பழங்கள் தானம்மன அமைதி உண்டாகும்
வஸ்திர தானம்ஆயுள் விருத்தி உண்டாகும்
கம்பளி தானம்வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்
கோ தானம்பித்ரு கடன் நீங்கும்
தயிர் தானம்இந்திரிய விருத்தி உண்டாகும்
நெல்லிக்கனி தானம்அறிவு மேம்படும்
தங்கம் தானம்தோஷம் நிவர்த்தியாகும்
வெள்ளி தானம்கவலைகள் நீங்கும்
கோதுமை தானம்ரிஷிக்கடன் அகலும்
எண்ணெய் தானம்ஆரோக்கியம் உண்டாகும்
காலணி தானம்பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்
மாங்கல்ய சரடு தானம்தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்
குடை தானம்எண்ணிய எதிர்காலம் உண்டாகும்
பாய் தானம்அமைதியான மரணம் உண்டாகும்
காய்கறிகள் தானம்குழந்தை ஆரோக்கியம் மேம்படும்
பூ தானம்விரும்பிய இல்வாழ்க்கை அமையும்
பொன் மாங்கல்ய தானம்திருமண தடைகள் நீங்கும்
மஞ்சள் தானம்சுபிட்சம் உண்டாகும்
எள் தானம்சாந்தி உண்டாகும்
வெல்ல தானம்வம்ச விருத்தி உண்டாகும்
தண்ணீர் தானம்மன மகிழ்ச்சி உண்டாகும்
சந்தன தானம்கீர்த்தி உண்டாகும்
புத்தகம் தானம்கல்வி ஞானம் உண்டாகும்

 

பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன. ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here