ஜோகூர் சுங்கச்சாவடிகளை மேம்படுத்த RM741 மில்­லி­யன் ஒதுக்கீடு – துணைப் பிர­த­மர் ஃபாடில்லா யூசூஃப்

ஜோகூர் மேம்­பா­லத்­தில் உள்ள பங்­கு­னான் சுல்­தான் இஸ்­கந்­தர் சுங்­கச்­சா­வடி நிலை­ய­த்தை­யும் இரண்­டாம் மேம்­பா­லத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள சுல்­தான் அபு பக்­கர் சுங்­கச்­சா­வடி நிலை­யத்­தை­யும் மேம்­ப­டுத்த அர­சாங்­கம் RM741 மில்­லி­யன் ஒதுக்­கி­யுள்­ளது.

துணைப் பிர­த­மர் ஃபாடில்லா யூசூஃப் தலைமை தாங்­கிய கூட்­டத்­தில் அம்­மு­டிவு தெரி­விக்­கப்­பட்­ட­தாக ஜோகூரின் பணி­கள், போக்­கு­வ­ரத்து, உள்­கட்டமைப்­புச் செயற்­கு­ழுத் தலை­வர் முக­மது ஃபாஸ்லி முக­மட் சாலே நேற்று முன்­தி­னம் வெளி­யிட்ட அறிக்கையில் கூறி­னார்.

ஒதுக்­கப்­பட்ட தொகை­யில் RM96.2 மில்­லி­யன் இவ்­வாண்டு செல­வி­டப்­படும் என்றும், அதில் சுமார் மூன்­றில் ஒரு பங்கு மோட்­டார்­சைக்­கிள்­க­ளுக்­கான எம்-பைக் தடங்­களை மேம்­ப­டுத்த செல­வி­டப்­படும் என்­று முக­மட் ஃபாஸ்லி கூறினார்.

இதுதவிர இரண்டு சுங்­கச்­சா­வ­டி­க­ளி­லும் நுழை­வில் 25 மோட்­டார்­சைக்­கிள் தடங்­களும் வெளி­யே­றும் வழி­யில் 25 தடங்­களும் அமைக்­கப்­படும். அந்­தச் சாவ­டி­களில் தற்­போது 100 எம்-பைக் தடங்­கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜோகூ­ருக்­குள் நுழை­வ­தற்­கும் அதி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்­கும் 150 மோட்­டார் சைக்­கிள் தடங்­கள் இயங்கும்போது, போக்­கு­ வ­ரத்து நெரி­சல் குறை­யும் என்றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஜோகூ­ருக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான தரை­வ­ழிப் பாதை­களில் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்க செயற்­குழு 23 பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ள­தாக துணைப் பிர­த­மர் ஃபாடில்லா கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்திப்பில் கூறி­யி­ருந்­தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here