புக்கிட் அமானின் புதிய நிர்வாகத் துறை இயக்குநராக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று, தேசிய காவல்படை செயலாள,ர் டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுவரை புக்கிட் அமானின் நிர்வாகத் துறை இயக்குநராக பதவி வகித்த டத்தோஸ்ரீ ஜைனி ஜாஸ் கடந்த மார்ச் 9 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, டத்தோ அஸ்மி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








