ஜோகூரில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது

கடந்த 12 மணி நேரத்தில் அதிகமான குடும்பங்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதை அடுத்து, ஜோகூரில் வெள்ள நிலைமை சீராக மேம்பட்டு வருகிறது.

இன்று புதன்கிழமை (மார்ச் 15) காலை 8 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெறியேற்றப்பட்டு, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,157 குடும்பங்களைச் சேர்ந்த 36,086 பேராக உள்ளது.

இது நேற்றிரவு (மார்ச் 14) 8 மணியுடன் ப்பிடும்போது, 10,625 குடும்பங்களைச் சேர்ந்த 37,503 பேராக இருந்தது என்று ஜோகூர் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

நேற்று மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களும் மூடப்பட்டன.

“தற்போது, 35,849 பேர் பத்து பகாட்டில் உள்ள 110 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். “இதைத் தொடர்ந்து மூவாரில் 111 பேரும், சிகாமாட்டில் 102 பேரும் மற்றும் தாங்காக்கில் 24 பேரும் இன்னும் தங்கியுள்ளனர் ,” என்று குழு கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here