நாட்டில் கரும்பு உற்பத்தி தொழிலை மேம்படுத்த ரஃபிஸி திட்டம்

நாட்டின் சர்க்கரைக்கான தேவையை பூர்த்தி செய்ய உறுதுணையாக கரும்பு உற்பத்தித் தொழில் மேம்படுத்தப்படும் என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு பெர்லிஸின் சூப்பிங்கில் உள்ள கரும்புத் தோட்டம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது, பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யும் மூல சர்க்கரையையே நாடு முழுமையாக நம்பியுள்ளது என்று அவர் கூறினார்.

எனவே மலேசியாவில் கரும்பு உற்பத்தித் தொழிலை மேம்படுத்த பேராக்கில் வடபகுதியில் 405 ஹெக்டேர் வரையிலான நிலப்பரப்புகளை அரசாங்கம் தற்போது அடையாளம் கண்டு வருகிறது என்றார்.

“நாட்டில் தற்போது 100 விழுக்காடு மூலச் சர்க்கரையும் இறக்குமதி செய்யப்படுகிறது, மேலும் இது விலை உயர்வு அல்லது நாணய மாற்று விகிதம் மற்றும் எண்ணெய் விலைகள் ஆகியவற்றில் சிக்கல்கள் ஏற்படும் போது, அதற்கான சரக்கு செலவுகள் அதிகமாக இருக்கும்.

“எனவே, நாம் கரும்பு பயிரிட வேண்டிய அவசியம் உள்ளது, மேலும் அவற்றை வாங்குபவர்கள் இருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் சரியான வழிமுறையை ஏற்பாடு செய்யும்” என்று, நேற்று நாடாளுமன்றத்தில் குழு பொருளாதார அமைச்சக குழு மட்டத்தில் நடந்த விவாதத்தின் போது அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here