ஜோகூர் வெள்ள மறுசீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக RM150 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு நிதி அமைச்சு ஒப்புதல்

ஜோகூரைப் புரட்டிப்போட்ட மோசமான வெள்ளத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு அனைத்து அரசு அமைப்புக்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதற்காக RM150 மில்லியன் கூடுதல் ஒதுக்கீட்டிற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும், ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது குறித்து, இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16,167 குடும்பங்களுக்கு அரசாங்கம் தலா RM1,000 பண உதவியை வழங்கியுள்ளது என்றும், வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணத் திட்டங்கள் மூலம் அவர்களுக்கு தொடர்ந்து மேலும் பல உதவிகளை செய்வதாகவும் அவர் கூறினார்.

“துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, வெள்ளம் தொடர்பான குறிப்பிட்ட சீரமைப்பு திட்டங்களைக் கண்டறிய ஜோகூர் சென்றிருந்தார்.

“ஜோகூரில் வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமும் நான் கேட்டுள்ளேன்,” என்று பிரதமர் கூறினார்.

எவ்வாறாயினும், அரசு சாரா நிறுவனங்கள் (NGOக்கள்), பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு அன்வார் வலியுறுத்தினார், ஏனெனில் ஜோகூர் மணிலா அரசு இதனை தனியாக சமாளிப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் கூற்றுப்படி, வெள்ளத்தின் போது மொத்தம் 82,831 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், தற்போது ஜோகூரில் உள்ள 102 தற்காலிக நிவாரண மையங்களில் இன்னமும் 26,879 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here