சிங்கப்பூர் அதிபர் ஹலிமா மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா வந்தடைந்தார்

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், இன்று முதல் மார்ச் 22 வரை மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா வந்தடைந்தார்.

கடந்த அக்டோபர் 2022 இல், சிங்கப்பூருக்கு விஜயம் செய்த மேன்மைதங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் அழைப்பின் பேரில் அவரது இந்தப்பயணம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா உட்பட சிங்கப்பூர் அரசங்கத்தின் பேராளர் குழு வந்த விமானம், இன்று காலை 10.20 மணிக்கு KLIA  வந்தடைந்தனர்.

KLIA-க்கு வந்தடைந்த ஹலிமா மற்றும் அவரது குழுவினரை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி வரவேற்றார்.

இந்த வருகை மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்று விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here