மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லா ஷா, தேசிய காவல்துறையின் (PDRM) அனைத்து உறுப்பினர்களுக்கும் 216வது போலீஸ் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதில் தங்கள் கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்த மாமன்னர், நேரம் மற்றும் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அயராது உழைத்து, தியாகம் செய்ததற்காக ஓய்வு பெற்றவர்கள் உட்பட அனைத்து காவல்துறையினருக்கும் அவரது நன்றியையும் பெருமையையும் தெரிவித்தார்.
“மக்கள் மற்றும் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க பாடுபடும் காவல்துறையினர் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும்” என்று, இன்று திங்கட்கிழமை (மார்ச் 20) இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் பகிரப்பட்ட அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.