ஜோகூர் மாவட்டத்தில் வெள்ள நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருவதால், பத்து பகாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் உள்ள 43 தற்காலிக நிவாரண மையங்களில் 1,923 குடும்பங்களைச் சேர்ந்த 6,740 பேர் தங்கியுள்ளனர் என்று, மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
நேற்று (மார்ச் 20) இரவு 8 மணிக்கு, நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,972 பேராக இருந்ததுடன் ஒப்பிடுகையில், அது தொடர்ந்து குறைவடைகிறதை காட்டுகிறது என்று அது மேலும் தெரிவித்தது.









