அம்னோவின் புதிய தலைமை செயலாளராக முன்னாள் இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்னோவின் புதிய தகவல் தலைவராக சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்த அமைச்சராக இருக்கும் பெங்கராங்நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு முன்னர் தகவல் பிரிவு தலைவராக இருந்த இஷாம் ஜலீல் அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை (மார்ச் 18) நடைபெற்ற கட்சித் தேர்தலின் போது, பொந்தியான் பிரிவுத் தலைவர் பதவியையும், உச்ச மன்ற உறுப்பினர் இடத்தையும் வென்ற டத்தோஸ்ரீ அகமட் மஸ்லானுக்குப் பதிலாக அசிரஃப் நியமிக்கப்பட்டார்.
இதுதவிர, முன்னாள் புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் அம்னோவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
அம்னோவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று புதன்கிழமை (மார்ச் 22) அதிகாலை நடைபெற்றது.