நாடு முழுவதும் உள்ள தற்காலிக குடிநுழைவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களுக்குரிய அடித்தளத்தை உள்துறை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது என்று, அதன் அமைச்சர், டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.
சிறார்களின் நலனில் நிபுணத்துவம் பெற்ற அரசு சாரா நிறுவனங்களிடம் அவர்களை ஒப்படைக்கும் முன், அங்குள்ள சிறார்களின் உண்மையான எண்ணிக்கை மற்றும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் உள்துறை அமைச்சு கண்டறிந்து வருவதாக அவர் கூறினார்.















