வசதி படைத்த மாணவர் குழுக்களுக்கான MRSM கல்விக் கட்டணப் பள்ளிகளை நிறுவும் திட்டத்தில் அரசு ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த ‘எதிர்காலத் திட்டம்’ தொடர்பில் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பின் மூலம் பெறும் நிதியுதவியையும் மாரா பயன்படுத்தும் என்று கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சராகவும் இருக்கும் அஹ்மட் ஜாஹிட் கூறினார்.
மேலும் ஏழைகளுக்குப் பயனளிக்கும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஒருபோதும் கல்விக் கட்டணம் அறவிடும் MRSM கல்லூரி கட்டப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடந்த அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது, T20 மற்றும் M40 குழந்தைகளின் பள்ளிக் கல்விக்காக ஏழை மக்களுக்கும் B40 குழுவிற்கும் ஒதுக்கப்பட்ட மாரா நிலத்தை அரசாங்கம் பயன்படுத்துமா என்ற சையட் சாதிக் சையட் அப்துல் ரஹ்மானின் (PH-Muar) துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.









