சில நாடுகளில் மூடப்பட்டுள்ள மலேசிய தூதரகங்களை மீண்டும் திறக்க உத்தேசம்

சில நாடுகளில் ஒரு சில அசாதாரண காரணங்களுக்காக மூடப்பட்டுள்ள மலேசிய தூதரகங்களை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்க மலேசியா தயாராக உள்ளது என்று, வெளியுறவு அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.

மேலும் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முகமட் சின் தலைமையிலான குழு, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசிய தூதரகங்களை மீண்டும் திறப்பது பொருத்தமானதா? என்று, ஆய்வு நடத்தி வருகிறது என்றார்.

“சில நாட்டில் ஏற்பட்ட போரின் விளைவாக இதுவரை மூடப்பட்டுள்ள தூதரகங்கள் அல்லது அத்தூதரகங்களை மீண்டும் திறப்பதற்காக நாங்கள் தற்போது கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

இதுவரை ஈராக், சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் எங்களுடனான நல்லுறவின் அடிப்படையில், தங்கள் நாடுகளில் தூதரகங்களை மீண்டும் திறக்க மலேசியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜாம்ப்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here