கெர்லிங் தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை ஒருவர் பள்ளியின் ஆசிரியர்கள் அறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை போலீசார் விசாரணை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி அந்த ஆசிரியை உயிரிழந்தது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் நேற்று அந்த ஆசிரியையின் வீட்டிற்குச் சென்றார். உலுபெர்ணம் அருகே கம்போங் பினாங்கில் ஆசிரியரின் வீடு உள்ளது. அங்கு நேரில் சென்று ஆசிரியையின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவர்கள் அனைவரும் துயரத்தில் இருக்கின்றனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதால் அவர்களின் தனிப்பட்ட உரிமையை நாம் மதிக்க வேண்டும். ஆசிரியையின் மரணம் குறித்து ஆரூடச் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக ஃபட்லினா சிடேக் கூறினார்.
முழுமையான விசாரணை நடத்த போலீசாருக்கும் ஒத்துழைப்பும் அவகாசமும் வழங்கப்படுகிறது. ஆசிரியையின் குடும்பத்தாரை சந்தித்தபோது அவர்களுக்குத் தேவையான உதவிகள் எல்லாம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறேன் என்றும் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.










