RM433,000 மதிப்பிலான போதைப்பொருள்களை அழிக்கப் பகாங் காவல் துறை நடவடிக்கை!

கோலாலம்பூர் :

வழக்கு விசாரணைகள் முடிவடைந்த RM433,000-க்கும் அதிக மதிப்பிலான 2,485 போதைப்பொருள் சான்றுப் பொருட்களை நாளை சிலாங்கூர், புக்கிட் தகாரில் அழிக்கவுள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பகாங் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் இத்தகவலைத் தெரிவித்தார்.

கடந்த 2009 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட 14 வகையான போதைப்பொருள்கள் இதில் அடங்கும்: மெத்தம்பெட்டமைன் (Methamphetamine): 6.27 கிலோகிராம், ஹெரோயின் (Heroin): 1.09 கிலோகிராம், கஞ்சா (Cannabis): 610.95 கிராம், கெத்தும் நீர் (Ketum Juice): 1,960.33 லிட்டர், கெத்தும் இலைகள் (Ketum Leaves): 19,771.30 கிராம் (சுமார் 19.7 கிலோ), கோடீன் (Codeine) திரவம்: 93.11 லிட்டர் மேலும் கெட்டமைன், நிமெட்டாசெபம், யாபா, எக்ஸ்டஸி மற்றும் பிற தடைசெய்யப்பட்ட இரசாயனப் பொருள்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் மூலம் அழிக்கப்படவுள்ளன.

நீதிமன்ற வழக்கு விசாரணைகள் முழுமையாக முடிவடைந்து, குற்றவாளிகளுக்கான தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டுக் காலமும் நிறைவடைந்த பிறகே இவை அழிக்கப்படுவதாக அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தாண்டு ஆரம்பம் முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் பாகங் மாநிலத்தில் மொத்தம் 7,181 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,276 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here