இரப்பர், சிறுதொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக நோரைனி அஹ்மட் நியமனம்

பாரிட் சுலோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் நோரைனி அஹ்மட், இரப்பர் தொழில் சிறுதொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் (RISDA) புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

நேற்று பினாங்கு பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (PERDA) தலைமையகத்திற்கு தனது பணியின் நிமிர்த்தம் விஜயம் செய்த ​​துணைப் பிரதமரும், கிராம மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இந்த விஷயத்தை உறுதி செய்தார்.

நோரைனியின் இந்த புதிய பதவி குறித்து சமூக ஊடகங்களில் வைரலானதாகக் கூறப்படும் செய்தி குறித்து, துணைப் பிரதமரிடம் கருத்துக் கேட்டபோது, ​​”ஆம், ரிஸ்டாவின் தலைவராக நோரைனி அஹ்மட் நியமிக்கப்பட்டார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்,” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here