மக்காவ் மோசடியில் சிக்கி அரசு ஓய்வூதியம் பெறும் ஒருவர் சுமார் 2 இலட்சம் ரிங்கிட்டை இழந்தார்

அலோர் காஜாவிலுள்ள அரசு ஓய்வூதியதாரர் ஒருவர், மக்காவ் மோசடியில் சிக்கி RM195,000 தனது ஓய்வூதிய பணத்தை இழந்தார்.

“கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில், அரசுத் துறையின் முன்னாள் குமாஸ்தா உதவியாளரான பாதிக்கப்பட்ட பெண்ணை, தன்னை வழக்கறிஞர் என்று கூறிக்கொண்ட ஒரு பெண் தொடர்பு கொண்டு, பாதிக்கப்படடவருக்கு பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி முதல் அழைப்பு வந்தது,” என்று கூறினார்.

பின்னர் அதே நாளில், வக்கீல் என்று கூறிக்கொண்ட பெண், பாதிக்கப்பட்ட பெண்ணை அம்பாங் ஜெயா போலீஸ் அதிகாரி என்று சொல்பவரிடம் பேசுமாறு பரிந்துரைத்ததாகவும், அந்த போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பிடியாணை இருப்பதாகக் கூறியதாகவும் அர்ஷாத் கூறினார்.

போலீஸ்காரர் என்று அழைக்கப்படுபவர் பிடியாணை இருப்பதாக உறுதிப்படுத்தியவுடன், வக்கீல் என கூறிய பெண் பாதிக்கப்பட்ட பெண்ணின் அனைத்து சேமிப்புகளையும் ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் அந்த “வழக்கறிஞர்” பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வங்கி விவரங்களை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார், இதனால் அவருக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் பிரதிநிதித்துவம் செய்வதாகவும் உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது சேமிப்பை டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 2 க்கு இடையில் வழக்கறிஞர் எனக் குறிக்கொண்ட பெண்ணால் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக கூறினார்.

“ஜனவரி 6 அன்று குறித்த கணக்கீழ் பணம் காலியானதை பாதிக்கப்பட்ட பெண் கண்டுபிடித்தார்,” என்றும் பாதிக்கப்பட்டவர் சில நாட்களுக்கு முன்பு மஸ்ஜிட் தானா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here