பினாங்கில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த பெண்ணுக்கு 10 மாதங்கள் சிறை

கடந்த வாரம் RM1,860 மதிப்புள்ள போலியான RM100 மற்றும் RM20 நாணயத்தாள்களை வைத்திருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு துணிக்கடை தொழிலாளியான பெண்ணுக்கு, இன்று வியாழக்கிழமை (மார்ச் 30) ஜார்ஜ் டவுன் மாவட்ட நீதிமன்றம் 10 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குற்றவாளி கைது செய்யப்பட்ட நாளான மார்ச் 20 இல் இருந்து அவர் சிறைத்தண்டனை கணக்கிடப்படும் என்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூர் மெலாத்தி டயானா அப்துல் வஹாப் உத்தரவிட்டார்.

28 வயதான நோர்ஹயாத்தி, மார்ச் 20ஆம் தேதி 4.30 மணியளவில், பத்து ஃபேரிங்கியில் உள்ள ஒரு விடுதி அறையில், தனது இரு நண்பர்களான ஜுஹான் கான் முகமட் அலி, 52, மற்றும் முகமட் கத்ரி கமாருல்ஜமான், 41, ஆகியோருடன் சேர்ந்து 18 போலி நாணயத்தாள்களை (RM100 நாணயத்தாள் மற்றும் மூன்று RM20 நாணயத்தாள்) வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதே நேரம் குற்றவாளியின் நண்பரான ஒரு விடுதியில் பணிபுரியும் ஜுஹான் கான், அதே தேதி மற்றும் நேரத்தில் அதே இடத்திலுள்ள ஒரு தனி அறையில் 14 போலி RM100 நாணயத்தாள் மற்றும் ஒரு RM20 நாணயத்தாள்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஜுஹான் கான் மற்றும் முகமட் கத்ரி ஆகிய இருவரும் குற்றச்சாட்டை எதிர்த்து விசாரணை கோரினர்.

சுஹான் கான் மற்றும் முகமட் கத்ரி ஆகியோருக்கு முறையே RM8,000 மற்றும் RM4,000 ஒரு தனிநபர் உத்தரவாதத்துடன் ஜாமீனில் செல்ல அனுமதித்தார், மேலும் வழக்கு முடியும்வரை அவர்கள் மாதத்தில் ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று தங்களது இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வழக்கை குறிப்பிடுவதற்கு மே 16ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here