செராஸ் ஜெயா இடைநிலை பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது

SMK செராஸ் ஜெயா இடைநிலைப் பள்ளிக் கட்டடத்தின் ஒரு தொகுதியின் மேற்கூரை நேற்று பிற்பகல் இடிந்து விழுந்தது.

கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டடத் தொகுதியின் மேற்கூரையில் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது இடிந்து விழுந்ததாக கல்வி துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.

நேற்று நண்பகல் 12.40 மணியளவில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிறிய சிமெண்ட் துண்டுகள் விழுந்ததை பள்ளி ஆரம்பத்தில் கண்டறிந்தது. அதனைத் தொடர்ந்து உடனே மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அந்த இடத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

“பின்னர் நண்பகல் 1.18 மணியளவில், பெரிய அளவில் இடிபாடு ஏற்பட்டு மேற்கூரை கீழே விழுந்தது. அதிஷ்டவசமாக அவ்விடத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் “பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வி அமைச்சகம், மாவட்ட கல்வி அலுவலகம் (PPD) மற்றும் தீயணைப்புத் துறைக்கு புகார் அளித்துள்ளார், மேலும் அடுத்த நடவடிக்கைக்காக பொதுப்பணித் துறையின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று, நேற்று SMK செராஸ் ஜெயாவில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here