மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்ததில் முதியவர் ஒருவர் மரணம்

கோலப் பிலா:

ஜாலான் பெத்திங்-கம்போங் பாரிட் திங்கி (Jalan Beting-Kampung Parit Tinggi)  சாலையின் 8 ஆவது கிலோமீட்டரில், மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று இரவு 7 மணியளவில் விபத்து நடந்ததாகவும், கோலப் பிலாவிலிருந்து கம்போங் பாரிட்டை நோக்கி Yamaha LC வகை மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று, கோலப் பிலா மாவட்ட காவல்துறைத் தலைவர் அம்ரன் முகமட் கனி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்தை நெருங்கியபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், கோலப் பிலா மற்றும் ஸ்ரீ மெனந்தி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலை பள்ளத்தாக்கில் இருந்து வெளியே கொண்டு வந்தனர் என்றும் அம்ரான் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோலப் பிலா மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு வரப்பட்டது, இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here