இன்று பிற்பகல் 9 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா உள்ளிட்ட நாட்டின் ஒன்பது மாநிலங்களில் இன்று பிற்பகல் வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், ” பகாங்கின் பெரா மற்றும் ரோம்பின், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட் மற்றும் சிப்பாங், சிலாங்கூர் மற்றும் மாலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் இந்த வானிலை நிலவும்; என்று அது தெரிவித்துள்ளது.

மேலும் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா மற்றும் சிரம்பான், போர்ட்டிக்சன், கோலாப் பிலா மற்றும் ரெம்பாவ் உள்ளிட்ட நெகிரி செம்பிலானின் பகுதிகளிலும் இதே வானிலையை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“இவை தவிர சரவாக்கின் கூச்சிங், செரியான், சமரஹான், பேத்தோங் (பூசா மற்றும் பேத்தோங்), மிரி (மிரி மற்றும் மருடி) மற்றும் லிம்பாங் ஆகியவற்றையும், சபாவில், (சிபிதாங், குவாலா பென்யு, பியூஃபோர்ட், நபவான் மற்றும் தம்புனன்), மேற்கு கடற்கரை (புட்டடன், பெனாம்பாங், கோத்தா கினாபாலு, துவாரான், ரானாவ் மற்றும் கோத்தா பெலுட்), தவாவ் (தாவாவ் மற்றும் லஹாட் டத்து), சண்டக்கான் ( டோங்கோட், கினாபாடங்கான் மற்றும் பெலூரான்) மற்றும் கூடாட் (கோத்தா மருடு )” ஆகிய இடங்களுக்கும் இவ் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here