திரெங்கானுவில் 178 இடங்களுக்கு 5G இணைய சேவையை நிறுவ தகவல் பல்லூடக ஆணையம் இலக்கு

இந்த ஆண்டு திரெங்கானு முழுவதும் மொத்தம் 178 இடங்களில்5G இணைய சேவையை நிறுவ தகவல் பல்லூடக ஆணையம் இலக்கு கொண்டுள்ளதாக, திரெங்கானு எம்சிஎம்சி இயக்குநர் ஜஹாரி இஸ்மாயில் கூறினார்.

மாநிலம் முழுவதும் இதுவரை 64 5G தளங்கள் முடிக்கப்பட்டுள்ளது. இது 5G தளங்களின் மொத்த அமலாக்கத்தில் 36 விழுக்காட்டை எட்டியுள்ளது.

“தற்போதைக்கு, கோலா திரெங்கானு, கோலா நெராஸ், டுங்கூன் மற்றும் கெமாமன் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பயனர்கள் 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும்,” என்று, அவர் வகாஃப் தபாயில் உள்ள கம்போங் லுபுக் பாண்டனில் உள்ள தேசிய இலக்கவியல் உள்கட்டமைப்பு திட்டத்தில் (Jendela) கூறினார்.

இதற்கிடையில், திரெங்கானுவில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 4G நெட்வொர்க் கவரேஜ் இப்போது 97.42 விழுக்காட்டை எட்டியுள்ளது என்றார்.

“இருப்பினும், திரெங்கானுவில் 4G கவரேஜின் மிகக் குறைந்த சதவீதத்தைக் கொண்ட மூன்று மாவட்டங்களான உலு திரெங்கானு, டுங்கூன் மற்றும் சேத்தியூ ஆகியவை மற்ற மாவட்டங்களுக்கு ஏற்ப, 4G கவரேஜை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை திரெங்கானு MCMC இன்னும் உறுதிப்படுத்த வேண்டும்.”

மேலும் குடியிருப்பாளர்களுக்கான இணைய கவரேஜின் தரத்தை நேரடியாக மேம்படுத்துவதற்காக, 65 புதிய ஜென்டேலா ஃபேஸ் 1 தொலைத்தொடர்பு கோபுரங்களில் 46 கட்டி முடிக்கப்பட்டு, அதில் 15 தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன என்றார்.

அதுமட்டுமல்லாமல், திரெங்கானுவில் இதுவரை 4G கவரேஜ் கிடைக்காத இடங்களை MCMC ஆய்வு செய்து வருகிறது என்று அவர் கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here