தைப்பிங்கிலுள்ள ஜமேக் தாமான் யயாசான் பள்ளிவாசலை, பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
மாலை 6.50 மணிக்கு அங்கு வந்த பேராக் சுல்தான் மற்றும் அவரது அரச பிரதானிகளை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட், மாநிலச் செயலர் டத்தோ அகமட் சுவைடி அப்துல் ரஹீம், பேராக் மாநில சட்டப் பேரவையின் சபாநாயகர் டத்தோ முகமட் ஜாஹிர் அப்துல் காலிட் மற்றும் முஃப்தி டத்தோ டாக்டர் வான் ஜாஹிடி வான் தே ஆகியோர் வரவேற்றனர்.
பள்ளிவாசலைத் திறந்து வைக்கும் முன், சுல்தான் நஸ்ரின் மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர் புதிய பள்ளிவாசலில் சுமார் 500 பேருடன் நடந்த நோன்பை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட சுல்தான், அங்கேயே ‘மக்ரிப்’, ‘இஸ்யாக்’ மற்றும் ‘தாராவிஹ்’ தொழுகைகளை நிறைவேற்றினார்.
ஏறக்குறைய 600 பேருக்கு இடமளிக்கக்கூடிய இந்த பள்ளுவாசலின் கட்டுமானம் ஏப்ரல் 23, 2012 இல் தொடங்கி ஜூலை 5, 2013 இல் நிறைவடைந்தது.








