வரும் ஜூலை மாதம் மலாக்கா மாநில சட்டப் பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் கட்சி எதிர்ப்பு மசோதாவுக்கு முன்னதாக, பெரிகாத்தான் நேஷனலின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தில் இணைவார்கள் என்று மலாக்கா முதல்வர் டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ நம்பிக்கை தெரிவித்தார்.
இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் மலாக்கா மாநில ஒற்றுமை அரசாங்கத்தில் சேர ஒப்புக்கொண்டால், ‘பூஜ்ஜிய’ எதிர்ப்பைக் கொண்ட முதல் மாநிலமாக மலாக்கா வரலாற்றில் இடம்பெறும் என்று அவர் மேலும் கூறினார்.
“28 மாநிலத் தொகுதிகளில், எங்களிடம் 26 மாநில இடங்கள் உள்ளன. நாங்கள் (பாரிசான் நேஷனல்) 21 இடங்களையும், பக்காத்தான் ஹராப்பான் தொகுதியிலிருந்து ஐந்து இடங்களையும், டிஏபியிலிருந்து நான்கு இடங்களையும், அமானாவில் இருந்து ஒன்றையும் வென்றோம்.
“எனவே, பெரிக்காத்தான் நேஷனலின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமை அரசாங்கத்தில் சேர விரும்பினால், நாங்கள் அவர்களை ஏற்க தயாராக இருக்கிறோம்,” என்று அவர் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 6) இரவு நடந்தச ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.








