ஏப்ரல் 25ஆம் தேதி மலாக்கா மாநில அளவிலான ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு

அலோர் காஜா: மலாக்காவில் உள்ள மாநில அளவிலான ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி மலாக்கா எம்ஐடிசி அனைத்துக்லக வர்த்தக மையத்தில் இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் என்று டத்தோஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ கூறினார்.

மலாக்கா மக்கள் அனைவரையும் திறந்த இல்லத்திற்கு வந்து விழாவைக் கொண்டாடுமாறு நாங்கள் அழைக்கிறோம் என்று முதல்வர் கூறினார். மலாக்கா அம்னோ திறந்த இல்லம் கம்போங் பூலாவில் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் இருக்கும் என்று கூறினார்.

சனிக்கிழமை (ஏப்ரல் 8) யுனிவர்சிட்டி மலாக்கா (UniMel) ஏற்பாடு செய்த “”Majlis Tautan Kasih 2023”  நிகழ்ச்சியில் அவர் இதை ஊடகங்களுக்கு தெரிவித்தார். UniMel அதிபராக இருக்கும் நெகிரி ஆளுநர் துன் முகமட் அலி முகமட் ருஸ்தாம் இந்த நிகழ்வைத் தொடக்கி வைத்தார். மேலும் Yayasan Taqwa-Majlis Agama Islam Wilayah Persekutuan (MAIWP) பேராசிரியர் Dr Mohd Roslan Mohd Nor வருகை புரிந்திருந்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here